Tuesday, June 21, 2005

படிறீ கடை திறவாய்

தமிழ்மணம் வலைப்பதிவர் கூடுமிடத்தில் போய் எனது பதிவையும் பட்டியலில் சேர்க்கும்படி இணைத்துவிட்டு வந்தேன்.தமிழ்மணம் என்பது தமிழில் எழுதப்படும் பதிவுகளுக்கு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும்.தற்செயலாக இணையப்பக்கங்களினூடு தெரிந்த தமிழ்மணம் என்னும் பெயரைச் சுட்டியே நான் இந்த வலைப்பதிவுலகிற்கு நுழைந்தேன்.எதைப் பார்ப்பது எதை விடுவதென்று தெரியாமல் பதிவுகள் நிறைந்திருந்தன.ஒரு ஐந்நூறு இருக்குமா?
தமிழில் இவ்வளவு பேர் வலைபதிவது மிகவும் மகிழ்வைத் தருகிறது.ஓரிரண்டு நண்பர்களையும் இங்கே சந்திக்கக்கூடும்.நான் முகமிலியாக இருந்தாலும் முகமுள்ளவர்களை நான் பார்க்க முடியுமல்லவா.

படித்துக்கொண்டே இருக்கிறேன் முடியவில்லை.எது நல்ல பதிவு எது சாதாரணப் பதிவு என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிக்க களைப்பாக உணர்கிறேன்.எங்காவது பதியப்பட்டவற்றில் நல்லவற்றைத் தொகுத்து அல்லது சுட்டிகளைத் தொகுத்து வைத்திருக்கிறார்களா தெரியவில்லை.இல்லையாயின் இனி வருபவர்களுக்காக நானாவது ஒன்றைத் தொகுக்கலாம் என்றிருக்கிறேன்.

இருவார தமிழ்மண ஓட்டத்தில் நேற்றுத்தான் நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் என்னவென்று தோன்றியது.தோன்றியதும் தமிழ்மணத்தில் கொடுத்திருந்த சுட்டிகளைத் தட்டி வாசித்ததில் போதுமான புரிதல் கிடைத்தது.அதிலும் யுனிகோட் எழுத்துரு பற்றி காசி என்பவர் எழுதியிருந்த கட்டுரை மிகப்பயனுடையது.ஒரு பதிவை ஆரம்பித்து நேற்றிருந்த மனநிலையைப் பதிந்தும் விட்டேன்.

தமிழ்மணத்தில் நானாக இணைத்துக் கொண்டாலும் எனது பதிவு பட்டியலில் தெரியவில்லை.அதற்கு ஏதாவது விசேட அனுமதி வேண்டுமா தெரியவில்லை.விதிகளில் சிறியதொரு குழப்பம் நிலவுகிறது.

தமிழ்மணத்தில் பதியும் போது கண்டம் கேட்கிறார்கள் என்னுடைய கண்டம் பட்டியலில் இல்லை :(

நான் தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்களுக்கும் அடங்கவில்லை.ஆகவே நான் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்.

நிறைய எழுதலாம் நானே எழுதி நானே படிக்க அலுப்பாயிருக்கிறது.பேசாமல் 'Love in the Time of Cholera' புத்தகத்தை வாசித்து முடிக்கலாம் இடையில் நிற்கிறது.

3 Comments:

Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பொடியன் வருக. உங்கள் பதிவு தமிழ்மணத்தில் இப்போது சேர்க்கப் பட்டுவிட்டது. அண்டார்டிக்காவில் இருந்தெல்லாம் தமிழில் எழுதுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்தார்களா தெரியவில்லை. (நீங்கள் உண்மையில் எந்தூர் முகமூடியோ தெரியவில்லை :-) )

-செல்வராஜ்.

6:51 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

அன்பின் நண்பர் செல்வராஜிற்கு
நீங்களும் தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவர் என நினைக்கிறேன்.என்னுடைய பதிவையும் மைய நீரோட்டத்தில் இணைத்தமைக்கு நன்றி.

நான் உலகம் சுற்றும் பொடியன்

8:16 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

என்னுடைய பதிவை திரட்டியில் காணவில்லையே :(

10:09 PM  

Post a Comment

<< Home