Monday, July 11, 2005

ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை.

தேனீ இணையத்தளத்தில் ஐரோப்பியவாழ் புத்திசீவிகளும் மனித, மானுட,நான்காம் அகில குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஐரோப்பியாவில் நடத்தப்பட்டு வரும் பின்நவீனத்துவ இலக்கியச் சந்திப்புகள் பற்றி விமர்சனம் என்ற பெயரில் நிகழ்த்தி வரும் கூத்துகளைக் காண முடிகிறது.

அதில் மனிதம் யோகராஜா என்பவர் எழுதியிருந்ததில் ஒரு பகுதி.
...............................................

என்னைப் பொறுத்தவரை நான் புலிகளின் செயற்பாட்டாளன் அல்ல. அவர்களின் செயற்பாடு சார்ந்த அமைப்பு முறையையும் (ளுவசரஉவரசந) ஏற்றுக்கொண்டவனும் அல்ல. ஆனால் இலங்கையில் பெருந்தேசிய, பேரினவாத சக்திகள் வெறிபிடித்தலைகின்ற இன்றைய சூழலில், இவர்களுக்கு எதிரான பெரும் சக்தியாக நிமிர்ந்திருப்பவர்கள் புலிகள்தான். மக்கள் சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களையும் தாண்டி, கறைபடிந்த பல அத்தியாயங்களுக்கும், அனுபவங்களுக்கும் ஊடாகத்தான் புலிகள் இந் நிலையை வந்தடைந்தார்கள் என்பது உண்மை. புலிகளின் கடைக்கண் பார்வைவீச்சு முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழர்கள் போன்ற சிறிய தேசங்களை வெறித்த போதும், இவர்கள் பேரினவாத சக்திகளுடன் பேரம் பேசுவதற்கும்கூட புலிகளின் பலம் ஆதாரமாக இருக்கின்ற யதார்த்தத்தை உதாசீனம் செய்துவிட முடியாது. இந் நிலையில் புலிகளைப் பலவீனப் படுத்துவதோ அல்லது பலவீனப்படுத்துவதற்கு ஆதரவாக இருப்பதோ, எதுவாயினும் தமிழ்த் தேசத்தின் மீது மேற்கொள்ளப்படும் வரலாற்றுத் தவறாகவே கருதுகிறேன்.


இன்று, புலிகள் பற்றிய வரையறுப்பில் நாம் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டியவர்களாக இருக்கின்றோம். வேறெந்த நாட்டுச் சூழலையும் எமது நாட்டின் யதார்த்த நிலைக்கு உதாரணிக்க முடியாது. தமிழீழ விடுதலையை நோக்கிப் புறப்பட்டவர்களை நாம் இன்று மூன்று பிரிவில் கண்டு கொள்கிறோம். புலிகளைத் தவிர்ந்த சிறிய பிரிவினராக, புலி எதிர்ப்பு வாதிகளும், தமிழீழ தேசத்தை நேசித்துக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகளுமே அவை.


ஆய்ந்து நோக்கின், புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை அரசியல் சார்ந்து நோக்குவதா அன்றி உளவியலுடன் இணைத்துப் பார்பதா என்ற கேள்வியும் எழுகின்றது. புலி எதிர்ப்பு அணியைச் சார்ந்த பலர் ஏதோ ஒருவிதத்தில் புலிகளின் நேரடிப் பாதிப்குக்குட்பட்டவர்கள் என்பதில் இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் கூர்ந்து நோக்கவேண்டியிருக்கிறது. ஆனால் புலி எதிர்ப்பு என்று கூறி, அரசு சார்பில் நிற்பதன் மூலம் தமிழ்த்தேசம் முழுவதுக்குமான எதிராளிகள் ஆகின்றார்கள் என்பதைப் பரிதாபத்துடன் பார்க்க்வேண்டியுமிருக்கிறது. அதனால் புலகளினால் படுகொலை செய்யப்படுகின்ற புலி எதிர்ப்பாளர்கள், மரித்துப் போகின்றபோதும் தமிழ்த் தேசத்தின் தார்மீகபலத்தை இழந்து, இறகை விட இலேசான இறப்பைத் தழுவிக் கொள்வதும் வேதனையே.

தமிழ்த் தேசியத்துடன் எவ்வித தொடர்புமற்ற, புலி எதிர்ப்பாளராகவும் ஒரு பகுதியினர் உள்ளனர். அரசு சார்பற்றவர்களாகக் காணப்பட்ட போதும், பாரம்பரியமாக சிங்களப் பேரினவாதத் திற்குப் பலியாகிப் போனவர்களாக அல்லது இதே பேரினவாதிகளிடம் சரணாகதி அடைந்தவர்களாக காணப்படும் இவர்கள் தம்மை மாக்சிஸ வாதிகள் என்று பீற்றிக்கொளவும் தவறுவதில்லை. இவ்வழி வந்தவர்களில் மானிடனும் ஒருவர்.

சும்மா இருப்பதே சுகம் என்றிருக்கும் ஜனநாயக சக்திகளின் நிலைப்பாட்டிலும் தர்க்கரீதியான கேள்வி எழுகின்றது. சுவிஸ் பாராளுமன்றத்தில் (வாக்குப் பதிவில் பங்கெடுக்காது) சும்மா இருந்த மூன்று கம்யூனிட்டுக்களினால் தீவிர வலதுசாரி ஒருவர் அரசவை ஏறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அரசுக்கு எதிரான குரலை உரத்து உயர்த்துகின்ற அதே வேளை, எழுத்து வடிவிலும், அரசியல் வழியிலும் புலிகளை ஜனநாயக வழிக்கு நகர்த்தும் வகையிலான நிர்ப்பந்தங்களை உண்டுபண்ணும் வகையில் ஜனநாயக சக்திகள் செயல்வடிவம் பெறவேண்டும்.

ஏற்கனவே உயிர்ப்புப் சஞசிகையும், தமிழீழம் பத்திரிகையும் தொடுத்த எழுத்துக்களால் புலிகள் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியதுண்டு. இவ் வெளியீடுகளில் பாவிக்கப்பட்ட அரசியல் பதங்களை புலிகளின் வெளியீடுகள் சுவீகரித்துக்கொண்டன. முஸ்லிம் மக்கள் சார்பாக புலிகள் பகிரங்க மன்னிப்பைக் கோராவிட்டாலும் அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறார்கள்;. சுனாமிப் பேரழிவின் பின்னாலான கௌசல்யனின் நிலைப்பாடு இதைத் தெளிவாக்கியது. இன்னும் சுவிஸ் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் மட்டக்களப்பு பூனொச்சிமுனைக் கிராமத்தில் 'சுவிஸ் முஸ்லிம் கிராமம்' என்ற பெயரில் 75 குடும்பங்களைக் குடியமர்த்தக் கூடிய வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்கியுள்ளனர். அரசியல் நோக்கங்கள் இருப்பினும் முஸ்லிம் மக்களை வெறுத்து ஒதுக்கிவிட முடியாது என்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் பின்னால் தமிழீழ ஜனநாயக சக்திகள் மேற்கொண்ட எழுத்து மூலமான நடவடிக்கைகளும் காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை சாதியம் என்று வருகின்றபோது தேசம், தமிழ்த் தேச விடுதலை, பாசிசம், பாசிச எதிர்ப்பு, ஜனநாயகம், ஜனநாயகத்துக்கான குரல் என்பதெல்லாமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இணர்டாம் பட்சம்தான்! புலம்பெயர் சூழலில் சாதியம், ஒடுக்கு முறை சார்ந்த செல்நெறிகளைக் கொண்டிருக்காவிட்டாலும் சுயமரியாதை மீதான, உளரீதியான தாக்குதலாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது விடயத்தில் புலிகளின் மௌனத்தையும் உடைக்கும் விதத்தில் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

முடிவாகளூ இலங்கைத் தீவின் இன்றைய சூழலில், மேற்குலக வல்லருசுகளின் ஏகாதிபத்தியத் திரைகளையும் சரி, புலிகளின் எதேச்சததிகாரச் (மானிடன் முன்மொழியும் பாசிசம்) சுவர்க ளையும் சரி மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டுமானால், பேரினவாத அரச அதிகார ஒடுக்குமறைகளுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்;. தவிர்க்க முடியாதபடி இன்று இப் போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகள்...

நாள்என் செய்யும் நாடி வந்த
வினைதான் என் செய்யும்
கோள்என் செய்யும் கொடுங்...

நன்றி :-பரமுவேலன் அண்ணாத்தை

5 Comments:

Blogger Karunaa said...

டோய்!உதாரடா பொடியன்?ஈழநாதன்,வசந்தன்?... சின்னப் பொடியன்கன்!கற்றுக்குட்டிப் பசங்கள்.புலிக்குச் சாதகமானதெண்டால் வெட்டி ஒட்டுவீங்களோ?கேடிப் பயல்கள்.யோகரசாவெண்ட 1960 இல் மார்க்சியம் கற்றவருக்கு மண்டையில் ஒரு மண்ணுமில்லையெண்டதைச் சொல்லத்தான் உதைப்போட்டனான் உதுக்கு புலிகளின் வால்குட்டீகளிடம் இவ்வளவு மவுசு வருமெண்டு நினைக்கேல்லை பொடிப்பயலே!உந்தச் சேட்டைதான் எனக்குப் பொடியளில் புடிச்சது.ஏதோ பண்ணுங்கடா மடப்பசங்களே!ஈழநாதப் பயலே!பெரியாளடப்பா நீ!அல்லது அவன் சின்னப்பொடி வசந்தன்தானே நீ?நான் மாடு,கோழி எண்டு படம்போட்டுதை என்னெண்டு நினைச்சீங்கள்?யோகராசா இவைகளுக்குக் கதைசொல்லத்தான் சரியானவரெண்டேல்ல சொல்லுறன்.உப்பிடிக் கவிழ்த்துப் போடுவதில் ஈழநாதனும்,வசந்தனும்தான் கெட்டிக்காரன்கள்.
கோபத்தோட
கருணாநந்தன் பரமுவேலன்

2:56 AM  
Anonymous Anonymous said...

///யோகரசாவெண்ட 1960 இல் மார்க்சியம் கற்றவருக்கு மண்டையில் ஒரு மண்ணுமில்லையெண்டதைச் சொல்லத்தான் உதைப்போட்டனான்///

மார்க்சிசம், லெனிலிசம்,கம்யூனிசம் படித்த பலருக்கு மண்டையில் ஒன்றும்
இல்லை என்பது பலருக்கு தெரிந்த, ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாத சங்கதி.உளுத்துப் போன மேற்படி சங்கதிகளை தாங்கிய நாடுகளே
உளுத்துப் போய் விட்டன.

புலிகளுக்கு எதிராக அனிதிரண்ட உங்களுக்குள்ளையே பல அணிகள்,பல
குளாறுபடிகள்.புலிகளுக்கு எதிராக
கொடிபிடித்த பலர் இன்று யதார்த்தம்
உணர்ந்து,உண்மை நிலை அறிந்து
புலியணிக்கு வந்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் ஒரு தலைவர் பெரிய நாத்திகவாதி.கடவுள் மறுப்பு இப்படி.ஆனால் வீட்டை விட்டு புறப்படும்நேரம் துண்டை நழுவவிடும்
சாக்கில் பக்கத்தில் உள்ள கோயிலைக்
கும்பிடுவார்.
அது போலவே இங்கும் பலர்.80 களில்
தொடங்கிய புலியெதிர்ப்பை இப்போது
யதார்த்தம்,உண்மை உணர்ந்து கைவிட்டு
விட எண்ணினாலும் அவர்களால் முடியாது.அவர்களுக்கே தெரியம் தாம்
இப்போது செய்வது வறட்டு வாதம் என்று.ஆனாலும் சிலர் துனிந்து வெளிவருகின்றனர்அந்த மாயையில் இருந்து.

நீங்களும் அந்த மாயையில் இருந்து வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறோம் ஆவலுடன்.தனிமனிதனுக்கு நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் பொது நிகழ்வாக்கி தேசியத்துக்கு எதிராக குரல்
கொடுப்பவர்களே.வெளியே வாருங்கள்
அந்த மாயையில் இருந்து.

3:44 PM  
Anonymous பரமர் சொன்ன கும்பல் said...

ஐயா பரமுவேலத்தார்!
அதுசரி எங்க உங்கட பட்டங்களக் காணேல? (எனக்கு சின்னவயசில எங்கட ஊர்த்திருவிழாவில நான் அடம்பிடிச்சு முதன்முதல் வாங்கின வெளவால் பட்டம் துலைஞ்சு போன சம்பவம் ஞாபகம் வருது)

சரி அதவிடுங்கோ. நீங்கள் கோபத்தோட சொன்னாலும் எங்களுக்கு அது விளையாட்டுத்தான். (நீங்கள் எழுதிற தொனியையே எழுத்துக்குள்ளால சொல்ல ஏலாம அடியில கோபத்தோட, ஆத்திரத்தோட எண்டு குறிப்புப் போட்டுத்தான் சொல்ல வேண்டிக் கிடக்கு;-)

நீங்கள் வயதில குறைஞ்ச எங்கள மட்டுமில்ல, பெரிய ஆக்களையும் (கறுப்பி உட்பட) ஒண்டுந் தெரியாத பாப்பாக்கள் மாதிரித்தான் பாக்கிறியள் எண்டத உங்கட கனபின்னூட்டங்களிலயும் பதிவுகளிலயும் பாத்திருக்கிறம். நீங்களே சொன்ன வரையறையின்படி உங்களுக்கு தலை கனக்கக் கூடாது. ஆனால் ஏன் கனக்குது எண்டு தெரியேல.

இதை எழுதிறது ஆர் எண்டு கீழ போடப்போறேல. ஏனெண்டா இது பரமுவேலத்தாருக்கு மட்டுமே எழுதப்பட்டது. எந்தப் பேர் போட்டாலும் அது அவன்தான், இவன்தான் எண்டு இன்னும் சில பேருகளோட போட்டுக் குழப்பப் போறது நிச்சயம். அதால தான் பேர் போடவில்லை. (மற்றும்படி உங்களுக்குப் பயந்துதான் எண்டு நீங்கள் நினைச்சுச் சந்தோசப்பட்டாலும் சரிதான். யாவரும் இன்புற்றிருப்பதன்றி....)

அடே பொடியா!
நீ ஆரப்பா?
முதல் எழுதின சில பதிவுகளிலயிருந்து நீ எங்களப் போல விளையாட்டுப் பொடியன் இல்லையெண்டு விளங்குது.
ஏதோ, அண்ணாத்தையளக் கோவமேத்தாம எழுதினாச் சரிதான்.

7:12 PM  
Anonymous பரமர் சொன்ன கும்பல் said...

//1960 இல் மார்க்சியம் கற்றவருக்கு மண்டையில் ஒரு மண்ணுமில்லையெண்டதைச் சொல்லத்தான் உதைப்போட்டனான்//

ஆர் சொன்னது மண்டையில மண் இருக்க வேணுமெண்டு? ;-D

எங்களக் கற்றுக் குட்டியள் எண்டு சொன்னதுகூட சரிதான். பாராட்டுக்களாகவே எடுக்கிறம். ஏனெண்டா ஏதோ கற்றுக்கொண்டிருக்கிறமே. எல்லாம் கற்றுவிட்டோம் எண்டு புலம்பித்திரியேலத்தானே. அல்லது இவ்வளவுந்தான் கற்க இருக்கு எண்டு சும்மா இருக்கேலத்தானே. அல்லது நான் கற்றது மட்டுந்தான் கல்வி எண்டு பேசாம இருக்கேலத்தானே.

நீங்கள் மாடு கோழி படம்போட்டத நான் மாறியெல்லோ நினைச்சுப்போட்டன். அதுகளுக்குச் சொன்ன கதைய நானேன் வாசிச்சன் எண்டு நினைச்சன். எண்டாலும் மாடுகோழியளுக்குரிய புளொக் எண்டு ஒரு அறிவிப்பைத் தந்தால் மனுசர் வராம நிப்பாட்டலாமெல்லே. அதச் செய்யுங்கோ முதலில.

அதுசரி, "வால்குட்டீக்கள்" எண்டால் என்ன?

7:21 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பரமண்ணை உங்களோடை நல்ல பகிடி.நானெண்டால் நேரடியாகத்தான் மல்லுக்கு நிற்பன் இப்படிச் செய்யமாட்டன் ஏதோ உங்களுக்கு என்னிலையும் வசந்தனிலையும் கொஞ்சம் பட்சம் இருக்கிறபடியா நீங்கள் இப்படிச் சொன்னதையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுறன்

9:23 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home