Saturday, October 14, 2006

ஸ்குரூடிரைவர்

தமிழ் வலையுலகில் மெல்லத் தவழ்கையில் கண்ணில் பட்டார் தமிழ் பார்டென்டர்.சரிதான் என்னுடைய இச்சையை இங்கே தீர்க்கலாம் தீர்த்தம் பருகலாம் என்று போனால் அடிப்படையே தப்பாக இருக்கிறதே.

பார்ட்டென்டரின் வேலை என்ன?பாரில் வருபவர்களுக்குத் தீர்த்தம் தெளிப்பது.ஆனால் இந்த பார்ட்டென்டரோ வருபவர்க்கெதுவும் மிச்சமின்றி தீர்த்தம் அத்தனையையும் தானே பருகிவிடுவார் போலிருக்கிறது.போதாக்குறைக்கு வேலையில்லாதவன் என்று பக்கவிவாதம் வேறு.
அண்ணே அடிப்படையே தப்பண்ணே ஒரு ஸ்குரூடிரைவர் கலக்குவது எப்படியென்று தெரியாத நீங்கள் எல்லாம் என்னைப்போன்ற ரசனைவாதிகளுக்கு தாளாத மனவருத்தத்தையும் தீராத தேசியவியாதியையும் ஏற்படுத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே.

கில்லியிலிருந்து ஒரு அன்பர் வாங்க வாங்க ஸ்பைசியாய்த் தாங்க என்றிருக்கிறார்.என்றைக்கும் ஒரு பெடியனின் கொள்கை எல்லோரும் இன்புற்றிருக்கவன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே என்பதுதான்.

இதோ ஸ்பைசியாய் கொஞ்சம் ஸ்குரூடிரைவர்.

ஸ்குரூடிரைவர் ஒரு மிக்ஸ் பெயரைக் கேட்டதும் பயந்துவிடாதீர்கள்.மேலை நாடுகளில் இது பெட்டைகளின் பிரிய பானம்.இதிலும் பெட்டைப் பானம் பெடியன் பானமா என்று பெண்ணியவாதிகள் கிளம்பிவிடாதீர்கள் பிறகு நான் உங்களோடை கதைக்கிறதுக்கு லோங் ஐலண்ட் ரீ தான் குடிக்கவேணும்.

கொஞ்சம் வொட்கா,நிறைய தோடம்பழச் சாறு ரெண்டும் சேர்ந்தால் சந்திரலேகா அடச்சே ஸ்குரூடிரைவர்.நிறைய வொட்கா கொஞ்சம் தோடம்ப்ழச் சாறு ரெண்டும் சேர்ந்தால் அதுக்குப் பேர் அமரர் ஊர்தி டிரைவர்.

வெளியிலிருந்து பார்த்தால் அசல் தோடம்பழச் சாறுதான்.ஆகவே எங்கேயாவது விருந்தில் தோடம்பழச் சாறு அருந்தும் ஆண்கள் பெண்கள் அனைவரையும் சந்தேகப்படுங்கள்.

இந்த வொட்கா இருக்கே வொட்கா என்ன கவித்துவமான பெயர்.மார்க்சியம்,ரஷ்ய இலக்கியங்களுக்கு அடுத்தபடியாய் ரஷ்யாவிலிருந்து நான் பெற்றுக்கொண்டது வொட்காதான்.ஒரு கையில் வொட்கா இன்னொரு கையில் புஷ்கின்,அகமதோவா கவிதைகள் என்று கலந்து பருகிய நாட்கள் நாலைந்து வருடம் முன் தானென்றாலும் மங்கலாய்த் தான் தெரிகிறது.

வொட்காவுக்கு Tonic,Lime என்று பல மிக்ஸ் இருந்தாலும் என்னுடைய சொய்ஸ் ஸ்குரூடிரைவர்தான்.வொட்காவின் மிதமான நாக்கை அள்ளும் எரிவு,தோடஞ்சாறின் புளிப்பு இரண்டையும் சரியாகக் கலப்பதற்கு நல்லதொரு பார்டென்டர் இருந்தால் அன்று சொர்க்கம் அருகிலே

வொட்கா என்னும் பெயரே கொஞ்சமாக வொல்காவை ஞாபகப்படுத்துகிறதல்லவா.ஒரு கலாசாரத்தின் பிறப்பிடமல்லவா அது ?தனிப்பனைக் கள்ளிலிருந்து வொட்காவரை என்று எனது கலாச்சார நெடும்பயணத்தின் மைல்க் கற்களை எழுதிவைக்க விருப்பம்தான் பார்ப்போம்.

போலந்தின் Evolution ஐயும் ஸ்வீடனின் Absolut ஐயும் ரஷ்யாவின் ருஷ்காயாவையும் ஒருமுறையாவது காணாத கண்ணென்ன கண்ணே
இங்கே போய் காண்க

17 Comments:

Blogger இளங்கோ-டிசே said...

ம்..நன்றாகதானிருக்கிறது ஸ்குட்ட்ரைவர்.
....
/தனிப்பனைக் கள்ளிலிருந்து வொட்காவரை என்று எனது கலாச்சார நெடும்பயணத்தின் மைல்க் கற்களை எழுதிவைக்க விருப்பம்தான் பார்ப்போம்./
விரைவில் எழுதுங்கள். உங்கள் மைற்கற்கள் என்னைப்போன்றவர்களுக்கு இளைப்பாற உதவக்கூடும் :-).

7:55 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

'பொடியன்' எண்டது எங்களைப் போல இளமையான ஆக்களையெல்லோ குறிக்கும்?
நீங்களும் அப்பிடியோ?
;-)
சரி, என்ன கனநாளாக் காணேல? விடுமுறை எண்டது ஒருவருசமோ?

நீங்கள் முந்தி எழுதின பதிவொண்டில நான்தான் நீங்களெண்டு (ஈழநாதனையும்) அந்தநேரம் டாக்குத்தரா நடிச்ச ஒருத்தர் சொல்லிப்போனார்.
பிறகு கனநாளா உங்களைக் காணேல எண்டதும் அந்தச் சந்தேகம் வலுத்துதோ என்னவோ தெரியாது, குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்குள்ளயே ஒருத்தன்மேல ஒருத்தனுக்குச் சந்தேகம். பிறகு உங்களை மறந்தே போனோம்.
ஆனா இந்தப்பதிவு, இதுக்கு முந்தின பதிவுகள் சிலதுகளால அதைப் பொய் எண்டு நிரூபிச்சுப் போட்டியள்.
ஏனெண்டா நீங்கள் எழுதிற தளங்கள் எனக்கு எட்டாதவை.

அடிக்கடி வந்து எழுதுங்கோ.

8:48 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

நன்றி டிசே ஒருநாள் செல்வம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்த்திருக்கிறேன் கதைக்கவில்லை.செல்வம்,மகாலிங்கம்,திருமாவளவன் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.

வசந்தன் அவ்வப்போது உங்கள் பதிவுகளைப் படிப்பதுண்டு.நீண்ட காலம் கழித்து உங்கள் குரற்பதிவொன்றை கேட்டதில் மகிழ்ச்சி.நீங்கள் சொன்ன பின்னூட்டம் படித்தேன் கணக்கில் எடுக்கவில்லை.சிலருக்கு அவர்களது ஈகோ காயப்படும்போது பயங்கரமாகக் கோபம் வருவதும் அதன் காரணமாக கண்டபடி உளறுவதும் வழமைதானே.ஈழநாதன்,நீங்கள் எங்கே நான் எங்கே?

அதுசரி ஈழநாதன் எங்கே வலைப்பதிவுப் பக்கமே காணமுடியவில்லை?

10:02 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

இடையில் சொல்ல மறந்த கதை.உங்களைப் பொடியன் என்று சொல்லுவினமெண்டால் நானும் பொடியன் தான்.என்ன தண்ணியடிக்கிறதையெல்லாம் கதைக்கிறான் என்று பார்க்கிறீர்களா கொஞ்சம் பிஞ்சிலே பழுத்தது எண்டு வையுங்கோவன்

10:03 PM  
Blogger இளங்கோ-டிசே said...

/செல்வம்,மகாலிங்கம்,திருமாவளவன் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்./
அவையளிட்டைதான் சுகம் கேட்கவேணும்...என்னட்டை கேட்டால் என்னெண்டு சொல்வது :-)?
.....
/அதுசரி ஈழநாதன் எங்கே வலைப்பதிவுப் பக்கமே காணமுடியவில்லை? /
அவர் அமானுஷ்யமாய் நடமாடுகின்றார் ஆக்கும்....தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்...என்ன வசந்தன் நான் சொல்வது சரிதானே :-)?

10:15 PM  
Blogger Jayaprakash Sampath said...

பெட்டைகளின் பானமா????

நல்ல வேளை, நானுண்டு என் பீர் உண்டு என்று இருந்த போது, திருப்புளி சாப்பிடறையா என்று நண்பர் ஆசை காட்டினார். அருந்தியிருந்தால், இன்னேரம் செக்ஸ் சேஞ்ச் ஆபரேஷன் இல்லாமலேயே, ஒரு அக்கா ஆகியிருப்பேன் போலிருக்கிறதே... சாக்கிரதையாகத்தான் இருக்கணும் போல :-)

10:43 PM  
Blogger kkk said...

மாமூ,

கலக்கற மாமூ, அப்புறம் மாமூ - நீ யாருன்னு எனக்கு தெரியும் மாமூ

என்ன கூட்டணி வச்சிக்கலாமா ?

10:50 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

டிசே தமிழன் உண்மைதான் அவர்களைப் பற்றி அவ்வளவாக அறிமுகமில்லை.பேசிப்பழகிய ஒரே ஆள் எண்டால் சேரனின் அண்ணா சோழன் தான் அவர் மூலம்தான் அப்படி ஒரு கண்காட்சி நடப்பதே தெரியும்.

காலம் இப்போதும் வருகிறதா என்ன?

12:16 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

பிரகாஸ் ஒரு உண்மையைச் சொல்லவா இந்தப் பெண்கள் உண்மையிலேயே சாமர்த்தியசாலிகள்தான் இருப்பதிலேயே நல்ல Mixtures ஐ பெண்களின் பானம் என்று ஒதுக்கிவிட்டார்கள் நாங்களும் மப்பேறினாக் காணும் எண்ட நல்லெண்ணத்தில் இருக்கிறதிலேயே Strong ஆ எங்களுக்கு எடுத்துக் கொண்டிட்டம்.உண்மையிலேயே இந்தமாதிரி Cocktails இன் சுவையை ரசிக்கவேண்டுமென்றால் Ladies mixtures/punches ஐ குடிச்சுப் பார்க்கவேண்டும்
திருப்புளியை விடுங்கோ வொட்கா மார்ட்டினி கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்க்கிறது

12:25 AM  
Blogger தருமி said...

அதென்னங்க தோடம்பழம்...?
சீக்கிரம் சொல்லுங்க...நேரம் ஆகுது.. :)

12:26 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

பார்ட்டென்டர் தலைவா நீங்கள் எங்கே நாங்கள் எங்கே நீங்கள் பாருக்கு உள்ளே நாங்கள் பாருக்கு வெளியே.நீங்கள் அடுக்கி வைச்சு அழகு பார்க்கிற ஆட்கள் நாங்கள் குடிச்சுப் போட்டு அசிங்கமாக்கிற ஆட்கள்.உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலை எத்தனை குவார்ட்டர் தூரம்.கூட்டணி எல்லாம் வைக்கமுடியாது தலை அப்புறமா நீங்க கோப்பிறேசன் கொட்டிலிலை கூத்து கூத்து குடிக்கக் குடிக்கப் பரமண்ணைக்கு ஊத்து ஊத்து எண்டு ஊத்தித் தந்து உளறுவாயன் ஆக்கிடுவீங்கள் பிறகு அந்தாட்டிக்கா மானம் டைட்டானிக் கப்பல்ல போயிடும்

12:29 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

தருமி அதை ஒறேஞ்ச் எண்டும் சொல்லுவினம்.பார்த்தண்ணை எதோடை எதைக் கலக்கிறதெண்டு சரியா நியாபகம் வைச்சிருங்கோ

12:42 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//என்ன வசந்தன் நான் சொல்வது சரிதானே :-)?//
என்ன டி.சே,
உதைப்போய் என்னட்டக் கேட்டா? ஈழநாதனையெல்லோ கேக்க வேணும்? ;-)

ஒரு பொடியன்,
நீங்களும் பொடியனெண்டாச் சரிதான். நானெங்க, ஈழநாதனெங்க, நீங்களெங்க எண்ட கேள்வியில நியாயம் இருக்கு.
ஒஸ்ரேலியா, சிங்கப்பூர், கனடா (அல்லது அந்தாட்டிக்கா) எண்டு பார்த்தால் கேள்வி சரிதான்.
தருமி,
உந்தப்பிரச்சினை முந்தி இராம.கி அவர்களின்ர வலைப்பதிவில வந்தது.
எங்கட தோடம்பழமும் உங்கட சாத்துக்குடியும் ஒண்டு எண்டு நான் சொல்லியிருந்தன்.

12:53 AM  
Blogger Thamil said...

"எங்கட தோடம்பழமும் உங்கட சாத்துக்குடியும் ஒண்டு எண்டு நான் சொல்லியிருந்தன்."

சாத்துக்குடி என்பது பச்சைத்தோடை, நாம் தோடம்பழம் என்பது ஒரேஞ்தோடையை, எனவே அவர்கள் ஆரஞ்சு என்பதே தோடம்பழம் என வரும் என நினைக்கிறேன். அதில் சிறிய வகையை கமலாப்பழம் என்கிறார்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆரஞ்சுக்கு தோல் உரிப்பது கடினம், கமலாப்பழத்துக்கு தோல் உரிப்பது இலகு.

2:28 AM  
Blogger வவ்வால் said...

அய்யா தோடம்பழம் என்று இங்கே புளியை சொல்வார்களே , ஆனாலும் இந்த ஸ்க்ருடிரைவரை ஒரு முறை ட்ரை செய்து தான் பார்க்கனும் அப்புறம் என்ன ஆண் பெண் சமத்துவம் ...ஹெ ..ஹே ..

5:04 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.நாம் எல்லோரும் இவ்வுலகின் குடிமக்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறீர்கள்

6:42 AM  
Blogger Sridhar V said...

ஆரஞ்சுப் பழம் எனபது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். (கண்ணதாசன் சொன்னது போல் - ஆரஞ்சால் ஆரஞ்சு என்று பெயர் வந்ததா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்). Thamil சொன்னது போல் அதை கமலா ஆரஞ்சு என்றும் சொல்வார்கள்.

சாத்துக்குடி என்பது எலுமிச்சை (lime) வகையைச் சேர்ந்தது என்று நினைக்கின்றேன். பெங்களூரில் இதை மொஸம்பி (ஹிந்தி) என்று சொல்வார்கள். இதை ஆங்கிலத்தில் sweet lime என்று சொல்வார்கள்.

screw-driver-ல இருப்பது orange-தான்.

எனக்குப் பிடித்த இன்னொரு ladies drink - ப்ளடி மேரி (bloody-mary). இதில் தக்காளி பழச்சாறு. வேறெதுவும் உண்டா என்ன? :-))

--வெங்கட் ஸ்ரீதர்

4:22 AM  

Post a Comment

<< Home