Thursday, November 16, 2006

வாஸந்தி ஆடும் கண்டி நடனம்

பலமுறை பலரும் வலைப்பதிவுகளில் விவாதித்த விடயம் தான் இது.என்றாலும் வாஸந்தி காலந்தோறும் தன் விஷக் கொடுக்குகளின் கூர்முனையை புதுப்பித்தபடியும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொதெல்லாம் எங்காவது பாய்ச்சியபடியும் அலையும் கருந்தேளாகவே இன்னமும் இருப்பதால் இதை எழுத வேண்டியதாகிறது.

ஈழப்போராட்டத்தின் மீதான வாஸந்தியின் தாளாத கோபம் என்பது திடீரென்று வந்து குதித்ததல்ல.தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களின் நீட்சியாகவே வாஸந்தி ஈழப்போராட்டத்தையும் காண்கிறார்.திராவிட இயக்கத்தின் மீதான தனது கோபங்களின் தொடர்ச்சியை,தமிழ்த் தலைவர்களின் மீது விமர்சனம் என்ற பெயரில் தான் கக்கும் விஷங்களை ஈழப்போராட்டத்தின் மீதும் காட்டுவது தற்செயலான ஒன்று அல்ல.வாஸந்தியின் அடி மனதில் புரையோடிப் போயிருக்கும் திராவிட எதிர்ப்பின் வெளிப்பாடு இதுவெனக் கொள்ளலாம்.

இதை வாஸந்தியின் ஆதிக்கசாதித் திமிர் அதனால் இயல்பாகவே எழுந்த திராவிட எதிர்ப்பு என்ற விதத்தில் பலரும் அணுகுகிறார்கள்.அது உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் இங்கு பார்ப்பனர்,எதிர்-பார்ப்பனர் என்ற சுழலுக்குள் இந்தக் கட்டுரையைக் கொண்டு போக விரும்பாமையினால் வாஸந்தியின் துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம் என்ற கட்டுரையின் எதிர்வினையாக அணுகலாம் என நினைக்கிறேன்.

கடந்த மாத தீராநதி இதழில் கேதீஸ் லோகநாதனின் மறைவையொட்டி வாஸந்தி எழுதிய கட்டுரைக்கு இந்த மாத தீராநதியில் கவிஞர் தாமரை,பேராசிரியர் சிவசேகரம் உட்படப் பலர் பதிலளித்திருக்கிறார்கள்.

கேதீஸ் போன்ற ஆளுமைகள் மீது எனக்கு பல்வேறு விமர்சனங்களிருப்பினும் மதிப்பும் நிறைய இருக்கிறது.அந்த மதிப்பு என்பது அவர்களின் கல்வி கேள்விகளின் பாற்பட்டது அல்ல.கொழும்பில் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர்கல்வி வரை வெளிநாட்டிலேயே கற்ற ஒருவர் இலங்கையின் யுத்த்தச் சூழலையொட்டி இலகுவாக மேற்கொள்ளக் கூடிய தீர்மானம் வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கேயே காலத்தை ஓட்டுவதாகும் ஆனால் கேதீஸ் தனக்கென்றொரு கோட்பாட்டை வகுத்துக்கொண்டு அதன் பாதையில் போயிருக்கிறார்.

இது ஒரு புலிவீரனின் தியாகம் எனப்படுவதற்கு எந்த விதத்திலும் குறைவுடையதல்ல.அவர் தனக்கென்று தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதையான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்பதுதான் அவரது அர்ப்பணிப்பைப் புறந்தள்ளி அவரை துரோகியாகவும் காட்டிக்கொடுப்பாளனாகவும் கருத வைத்திருக்கிறது.அரசாங்கப் பணிகளில் ஈடுபடுவதென்பதே தவறென்றால் இன்றைக்கு ஆசிரியர் முதல் அத்தனை அரசாங்க உத்தியோகத்தர்களையும் போட்டுத் தள்ளுவதென்பதுதான் தீர்வாக இருக்கும்

பலரும் நினைப்பதுபோல கொழும்பு மேல்தட்டுத் தமிழர்கள் பலர் பணத்துக்காக ஆசைப்பட்டு இந்தப் பதவிகளை ஏற்றுக்கொள்வதாக நான் நினைக்கவில்லை கேதீஸ் நினைத்திருந்தால் சர்ச்சைக்குரிய வேலைகளை விட்டுவிட்டு புலிகளின் கண்ணிலேயே படாத ஒரு வேலைக்கு போயிருக்கலாம் வணிக நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்த அவரை ஆரம்பம் முதலே அரசியல் நிர்வாகப் பாடங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது வெறுமனே பணமாக இருக்காது அதையும் மீறி மக்கள் தனது இனத்தின் இருப்பு சட்டபூர்வமாக தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை எப்படியாவது வென்றெடுத்துவிடலாம் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம் என்கிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ்
.ஆரம்பம் முதலே தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவே இனங்காட்டி வந்த கேதீஸ் அரசாங்க சமாதானச் செயலகப் பணியில் இருக்கும்போதே ஈழவாதியென்று ஜேவிபியின் தாக்குதல்களை எதிர்கொண்டவர்.ஜேவிபியின் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகவே அவரைக் கொட்டி(புலி) என்று அழைத்திருக்கிறார்கள்

இதேவேளை புலிகளின் செயற்பாடுகள் பற்றி கேதீஸ் வைக்கும் காட்டமான விமர்சனங்கள் சிங்களப் பத்திரிகைகளால் அவர்கள் நலன்கருதிப் பெரிதுபடுத்தப்பட்டன.இதனால் புலிகளின் வெளிப்படையான எதிர்ப்பையும் கேதீஸ் சம்பாதித்திருக்கிறார்.

இன்று இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிப்பதாக மகிந்த சிந்தனை இருக்கிறது ஒப்புக்குச் சப்பாணி போல சமாதானச் செயலகங்களை ஏற்படுத்தி கேதீஸ் போன்றவர்களை வெளிப்பார்வைக்கு வேலைக்கமர்த்தினாலும் மகிந்தவும் அவருடைய ராஜபக்ச சகோதரர்களும் இணைந்து ஏற்படுத்திய மகிந்த சிந்தனையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.அந்த சிந்தனைதான் லக்ஷ்மன் கதிர்காமர் முதல் கேதீஸ்,ரவிராஜ் வரை யாரை எப்போது போட்டுத்தள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறது.

மகிந்த சிந்தனையின் தீர்மானத்தின்படிதான் பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் நிலையத்திற்கு பணிமாற்றலாகப் போகவேண்டிய கேதீஸை மகிந்தவால் ஏற்படுத்தப்பட்ட சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகமாகப் பணியமர்த்தியது.ஜே ஆர் காலத்திலிருந்து கைக்கொள்ளப்பட்டு வரும் தந்திரமான உத்தி இப்படியான பதவியொன்றில் தமிழர் ஒருவரை இருத்தி அவருக்கு அரச பத்திரிகைகள் மூலம் முக்கியத்துவம் கொடுத்து வெளியுலகின் பார்வைக்கு தமிழர் ஒருவரே தமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார் எனக் காட்டுவது.மகிந்த அரசில் அந்தப் பலிகடா கேதீஸ்.

மகிந்தவின் செயற்பாடுகளாலும் அரச படைகளால் கணக்கு வழக்கின்றிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளாலும் கேதீஸ் அதிருப்தியுற்றிருக்கிறார்.தான் பணிபுரியும் சமாதானச் செயலகமே ஒரு கண்துடைப்பு என்று புரிந்துகொண்டிருக்கிறார்.அதிலிருந்து விலகப்போவதாக தெரிவித்தபோது மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச கேதீசை மிரட்டியிருக்கிறார்.உச்சக்கட்டமாக மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் அரசபடைகளால் கொல்லப்பட்டதையிட்டு அதிர்ச்சி அடைந்த கேதீஸ் அது சமப்ந்தமாக தனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் விசாரித்து தகவல்கள் சேகரித்திருக்கிறார்.இவை கேதீசின் மனைவி பவானி வாயிலாக வெளிவந்த தகவல்கள்.

சமீப காலமாக கேதீஸ் புலிகளுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை.பேட்டிகளோ கருத்துகளோ வெளியிட்டதில்லை.அது மட்டுமன்றி அவர் இருக்கும் பதவி கூட பொம்மைப் பதவிதான் என்று சாதாரண அரசியல் புரிந்தவர்களுக்குக் கூட தெரிந்திருக்கும்.ஆக புலிகள் கேதீசைக் கொலை செய்திருப்பின் அதனை மூன்று வருடகாலங்களுக்கு முன் செய்திருக்க வேண்டும் இப்போது செய்வதற்கு காரணமே இல்லை

செஞ்சோலை படுகொலைகள் மூலம் சரிந்து போன பெயரை தூக்கி நிறுத்தவும் எதிரான ஒருவரை அகற்றவும் புலிகளுக்கு சர்வதேச சமூகத்தில் கெட்ட பெயர் உருவாக்கவும் என்று பல மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்கும் ம்கிந்த சிந்தனையின் விளைவு தனக்கு பாதுகாப்புக்காக வருபவர்களுடன் வந்த புதியவர்கள் சிலரால் கொல்லப்பட்டார்

இவ்வளவும் இருக்க கேதீசும் மனைவியும் தனக்கு 20 வருடங்களாக நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் வாஸந்திக்கு இது தெரியாமற் போனதேன்.பவானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால் இவ்வளவையும் சொல்லியிருப்பாரே.

இங்கேதான் வெளிப்படுகிறது வாஸந்தியின் விஷக்கொடுக்கு பண்டாரநாயக்கர்களும் ராஜபக்சேக்களும் அடிக்கும் தாளத்துக்கு கண்டியன் நடனம் ஆடுவதன் மூலம் இந்திய அரசியலில் உள்ள சிலருக்கு தன்னை விசுவாசமான நாயாக நிரூபிக்க முயல்கிறார் வாஸந்தி.அதற்கான சாக்குப்போக்கு கேதீசின் மரணம் அதனை வைத்து தனது அரசியல் நாடகத்தை மகிந்த அரங்கேற்றிக்கொண்டு போக புலிகள் மீதான தனது எதிர்ப்பைக் காட்ட சிறந்த சந்தர்ப்பமாக வாஸந்தி பயன்படுத்திக் கொள்கிறார்.

இலங்கையில் அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் தொடக்கம் இந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்யும் அத்துமீறல்கள்,தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கட்டவிழ்த்து விடும் வன்முறை,சிவராம்,நிர்மலராஜன்,ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ் என்று நீளும் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்,செஞ்சோலை குண்டுவீச்சு,பாலியல் வன்முறைகள் எதையுமே வாஸந்தியால் விமர்சனமின்றி
ஏற்றுக்கொள்ள முடியும் புலிகளைத் தவிர.

இன்று கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் சாவதைப் பற்றிக் கவலைப்படும் வாஸந்தி குஜராத் கலவரம் பற்றி ஏதாவது கண்டனம் தெரிவித்திருக்கிறாரா ஏன் இந்த இரட்டை வேடம்?இந்திய இராணுவத்தால் யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களெல்லாம் புத்திஜீவிகளாக வாஸந்தி கண்ணுக்குத் தெரியவில்லையா?

வன்முறையை விரும்பாத ஜனநாயகப் பிம்பத்தை வாஸந்தி பொருத்திக்கொண்டதாக நினைக்கிறார் அது கண்டி நடனம் தான் என்று எல்லோருக்கும் தெரிகிறது.தீராநதியில் இத்தனை பேர் வாஸந்திமேல் பாய்ந்திருப்பதே சாட்சி

14 Comments:

Blogger பகீ said...

உப்பிடியே இங்கயும் ஒரு எட்டு எட்டி பாருங்க வாஸந்தியின்ர கட்டுரை பற்றி.

http://oorodi.blogspot.com/2006/10/blog-post_10.html

5:52 AM  
Blogger இளங்கோ-டிசே said...

பொடியன் அவசியமானதொரு பதிவு.
....
வாஸந்தியின் விஷச்கொடுக்குகளுக்கு நெடியகாலப் பின்னணியுண்டு. நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையைத் தவிர, அதற்கு முன் மாதங்களுக்கு முன் வன்னிக்குச் சென்ற அனுபவங்களை எழுதிய கட்டுரைகளிலும்கூ நிறைய விஷக்கொடுக்குகள் இருந்தன.
.....
புலிகளின் கட்டுப்பாடுகளில் இருப்பதைவிட, இன்று ஈழத்தில் பிற இடங்களில் இருப்பதுதான் ஆபத்தானது. யாரை யார் போட்டுத்தள்ளுவார்கள் என்று எதிர்வுகூரவே முடியாது. இதை ஒரு பதிவில் எழுதப்போக 'அப்படியா?' என்று எள்ளல் தொனியில் கேட்கப்பட்டதாகவும் நினைவிலுண்டு.
...........
தீராநதியில் வாஸந்தி ஈழப்போராட்டம் தொடர்பாக மட்டுமல்ல, பிற விடயங்கள குறித்தும் அபத்தமாகவே எழுதிவருகின்றார். உதாரணத்துக்கு இந்தியா ரூடேயில் எழுதிய வெ.சாவின் ஜாதியத்திமிருக்கெதிராய் அ.மார்க்ஸ் உட்பட்ட நிறப்பிரிகைத்தோழர்கள் காட்டிய எதிர்ப்பை திரித்து புதுவிதமான வியாக்கியானங்களோடு வெ.சாவை கட்டிக் காப்பாற்றப் பிராயத்தனப்பட்டிருக்கின்றார் வாஸந்தி. பொதியவெற்பனைத் தவிர மற்ற தோழர்கள்-எதிர்வினை செய்யாமல்- ஏன் வாளாவிருந்தார்களோ என்றும் புரியவில்லை. திருப்பத் திருப்ப பொய்யை கூறு அது உண்மையாகிவிடும் என்பதைதான் வாஸந்தி இன்றைய பொழுதில் நிறைய விடயங்களில் செய்து வருகின்றார்.

6:17 AM  
Blogger IIஒரு பொடியன்II said...

நன்றி பகீ.உங்கடை பதிவு படித்திருக்கிறன் பின்னூட்டம் போடவில்லை.

இந்தக் கட்டுரை வாஸந்தியை எதிர்கொள்ளல் என்ற பெயரில் போனமாதமே எழுதத் தீர்மானித்திருந்தேன்.வாஸந்தி பிரபாகரனைச் சந்திக்கச் சென்றது வாஸந்திக்கு அனுமதி மறுக்கப்பட பிபிசி ஆனந்திக்கு அனுமதி கிடைக்க வாஸந்தி இந்தியா ருடேயில் பிரபாகரனுக்கும் ஆனந்திக்கும் என்ன தொடர்பு என்று மோசமான அவதூறு பரப்பியது(சக பத்திரிகையாளரையே இப்படியா சொல்வது) ஈழப்போராட்ட ஆரம்பகாலத்தில் இருந்தே அரசியல் மட்டங்கள் வரை தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கட்டுரைகளைத் தணிக்கை செய்தது இத்தனைக்கும் அடிப்படைக் காரணமாகச் சொல்லப்படும் சாதி என்று நீண்ட கட்டுரையாக எழுதத் திட்டமிட்டிருந்தேன் இடையில் இந்தமாத தீராநதி படித்தபின்னர் கேதீஸ் கொலையை மட்டும் வைத்து வாஸந்தியை அம்பலப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது.

தீராநதியில் வாஸந்தி செய்வது திராவிட இயக்கங்களின் மீதான சாணியடிப்பும் தேசியக் கட்சிகளின் துதிபாடலும் தான்

8:03 AM  
Anonymous Anonymous said...

இந்த அம்மாவின்ர சிந்தனை குறித்து இங்கேயும்
பார்க்கலாம்.
அவ ஏழுதுக்கள் அநேகம் இந்த ரகம்தான். பதிவுக்கு நன்றி.

-மலைநாடான்

8:09 AM  
Anonymous Anonymous said...

//பொடியன் அவசியமானதொரு பதிவு. //

same here

--FD

8:24 AM  
Anonymous Anonymous said...

whatelse can you expect from her? Imagine a female version of another MALe journalist. Their writings are the results of their sickness what I call "I-syndrome," with its classic symptom of "I, da Intellectual hailed from an I_clan works for India Today" transparent in each word.

8:35 AM  
Blogger Jeyapalan said...

மிகத் தெளிவான ஆய்வு. கிணற்றுத் தவளைகளாகக் கத்தும் இது போன்ற பல வாசந்திகளுக்கு இது உறைக்க வேண்டுமே?

கயவர்கள், துரோகிகள் இல்லாத ஒரு பூமி உண்டா?

ஆனால் வாய்மையே வெல்லும் என்பது எக் காலமும் பொருந்தும்.

8:44 AM  
Blogger Boston Bala said...

தகவல்களையும் அறியாத விஷயங்களையும் விரிவாக விளக்கியதற்கு நன்றி. கட்டுரை தெளிவாக பின்னணிகளை சொல்லியிருக்கிறது. படித்து முடித்தவுடன் தோன்றிய ஒரு கேள்வி.

---கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் சாவதைப் பற்றிக் கவலைப்படும் வாஸந்தி குஜராத் கலவரம் பற்றி ஏதாவது கண்டனம் தெரிவித்திருக்கிறாரா ஏன் இந்த இரட்டை வேடம்?---

எழுதுபவர் முன்பே இந்த மாதிரி பின்புலக்கட்டுரைகள் எழுதி விட்டுதான் தொடர்பான தலைப்புகளில் கை வைக்க வேண்டுமா?

9:04 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

அந்தக் கட்டுரையில், புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று புத்திமதி வேறு சொல்கிறார். (கூடவே அமெரிக்கா அடிச்சுப் போடும் என்று பயமுறுத்தல் வேறு)
இவருக்கு இலங்கையில் நடந்துகொண்டிருப்பது என்ன என்று தெரியாதா?
தெரியும். தெரிந்துகொண்டே எழுதுகிறார்.
ஆகவே இதில் இவர் சமாதானப்பேச்சுவார்த்தைக்கு வருதல் என்று எதைச்சொல்கிறார்?
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு கைகளை உயர்த்திக்கொண்டு வருவதைத்தான் சொல்கிறார்.
இதைத்தான் வேறும் பலர் 'சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருதல்' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பேச்சில் என்ன நடந்தது, நடக்கிறது, யார் யார் என்னென்ன சொன்னார்கள், யார் மீறினார்கள் என்ற விவரங்களைத் தெரியாமல் இவர்கள் கதை சொல்லிக்கொண்டிருக்கவில்லை.
'புலிகள் சமாதானக்கு எதிரிகள், அவர்கள் ஒருபோதும் தீர்வுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள்' என்று இவர்களே ஏற்படுத்திக்கொண்ட, மற்றவர்கள்மேல் திணக்க முற்படும் கருத்தொன்றைப் பற்றிப்பிடித்துக்கொண்டு இன்றுவரை தம் பேனாவைச் சுழற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மகிந்த ராஜபக்ச சொல்வதற்கும் வாசந்தி சொல்வதற்கும் எந்த வித்தியாசமுமில்லை.

தாங்களே ஏற்படுத்திக்கொண்ட மாயையிலும் பொய்யிலிருமிருந்து இவர்கள் மீளப்போவதில்லை. மீளவும் முடியாது.

4:54 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே.

பொஸ்டன் பாலாஜி.இந்தக் கேள்வி அனேகமாக வலைப்பதிவுகளில் மட்டுமன்று விமர்சனம் எங்கெல்லாம் எழுகிறதோ அங்கெல்லாம் கேட்கப்படும் ஒன்றுதான்.முஸ்லிம்களுக்கு இலங்கையில் நடக்கும் கொடுமைகளை யார் வேண்டுமானாலும் பேசலாம் அதற்கு வரலாற்றுப் பின்னணி இருக்கவேண்டிய அவசியமில்லை.இது தனிப்பட்ட மனிதர்களுக்கு.பத்திரிகையாளன் சமூகத்தின் கண்ணாடி என்பார்கள் அவன் சொந்த விருப்பு வெறுப்புக்கு ஆடும் கூத்தாடியாக இருக்கக்கூடாது.அவனுக்கு/அவளுக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கலாம் ஆனால் பத்திரிகாதர்மத்தின் படி அதைப் புறந்தள்ளி உள்ளதை உள்ளபடி எழுதவேண்டும்.இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி எதுவும் வாய்திறக்காமல் இலங்கை முஸ்லிம்களுக்காக மட்டும் வாய்திறக்கும் போது அவர்களது நோக்கம் முஸ்லிம் பிரச்சனை இல்லை புலிகளைச் சாடுவதுதான் என்று தெளிவாகிறதல்லவா அந்த உள்நோக்கத்தைச் சந்தேகிக்கவேண்டுமெனொபதுதான் எனது கேள்வியின் நோக்கம்.

வாஸந்தி மட்டுமல்ல வலைப்பதிவில் எச்ழுதும் பல அன்பர்களே இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை ஆனால் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை பற்றி வாய்கிழியக் கத்துகிறார்கள்.உள்நோக்கம் ஒன்றே ஒன்றுதான் புலியெதிர்ப்பு.

முஸ்லிம்களைப் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் கவலைப்படுவதற்கும் ஜெயமோகன் கவலைப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கென்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

7:44 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

பேராசிரியர் சிவசேகரம் காட்டமான விமர்சனங்களை புலிகள் மீது வைப்பவர்.வாஸந்திக்கு காரசாரமான பதில் கொடுத்திருக்கிறார்.வழக்கமாகவே இலங்கை அரசியல் பற்றி இளைய அப்துல்லா எழுதும் பதிவு நடுநிலமைத் தன்மையோடு இருக்கின்றது அந்த நடுநிலமை வாஸந்திக்கு இல்லையே

7:48 PM  
Anonymous Anonymous said...

எந்த மாதத்துக்குரிய தீராநதியில் தாமரையும் சிவசேகரமும் பதிலளித்துள்ளார்கள்?
நான் இணையப்பதிப்பில் தேடிப்பார்த்துவிட்டேன். காணோம்.
அச்சுப்பதிப்பில் மட்டும் வந்துள்ளதா?
இணையப்பதிப்பென்றால் சுட்டி தரமுடியுமா?

8:38 PM  
Blogger IIஒரு பொடியன்II said...

முதலிலேயே சொல்லிவிட்டேனே இம்மாத தீராநதியில் என்று.அச்சுப் பதிப்பில் 'மட்டும்' வந்திருக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை.ஆனால் அச்சுப் பதிப்பில் வந்திருக்கிறது

10:06 PM  
Blogger Boston Bala said...

தங்களின் பதிலுக்கு நன்றி.

---முஸ்லிம்களைப் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் கவலைப்படுவதற்கும் ஜெயமோகன் கவலைப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கென்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்---

அ மார்க்ஸ் கட்டுரை முன்பு எப்பொழுதோ படித்த ஞாபகம் நிழலாடுகிறது. சரியாக நினைவில்லை. ஈழத்தைக் குறித்த ஜெ.மோ.வின் கட்டுரை எதுவும் வாசித்ததில்லை.

8:05 AM  

Post a Comment

<< Home